டிரேடிங் செயலி  மூலமாக முதலீடு செய்வதாக கூறி ரூ.1.50 கோடி மோசடி-ஒருவர் கைது

ஆந்திரா மாநிலம் திருப்பதிக்குச் சென்று  ராஜேந்திரனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

Jan 6, 2024 - 16:58
டிரேடிங் செயலி  மூலமாக முதலீடு செய்வதாக கூறி ரூ.1.50 கோடி மோசடி-ஒருவர் கைது

டிரேடிங் செயலி  மூலமாக முதலீடு செய்வதாக கூறி ரூபாய் 1 கோடி 50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் ஆவடி பகுதியை சேர்ந்த ராஜாராம்(38)என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில்,திருப்பதியை சேர்ந்த ராஜேந்திரன்(41) ஸ்டாக் டிரேடிங் அன்ட் ஷேரிங் தொழில் செய்து வருவதாகவும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் 3% சதவீதம் ஷேர் தருவதாக தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

அதை நம்பி, கடந்த 2021-ம் வருடம் டிசம்பர் மாதம் முதல் 2023-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில் வங்கி கணக்கிற்கு சுமார் ரூ.1.50 கோடி வரையிலும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பி உள்ளார்.அந்த பணத்தை ராஜேந்திரன் (ZERODHA APP TRADING)-ல் முதலீடு செய்து, அதில் வரும் லாபத்தில் ராஜாராம் வங்கி கணக்கிற்கு அனுப்புவதாக கூறி உள்ளார்.

ஆனால் இதுவரை எந்த தொகையும் அனுப்பவில்லை. அது மட்டும் அல்லாமல் இறந்துபோன ராஜேந்திரன் தந்தை லட்சுமிநாரயணன் பெயரில் டிரேடிங் தொழில் செய்து வருவதும், அவர்களது இரு சகோதரிகள், அம்மா ஆகியோர்களுக்கு தெரியாமல் அவர்களது பெயரில் வங்கி கணக்கையும் பயன்படுத்தி டிரேடிங் தொழில் செய்து வந்துள்ள விவரம் ராஜாராமுக்கு தெரியவந்ததது.

எனவே ராஜாராம் அவரது மனைவி சுபஸ்ரீ இருவரும் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.இந்த புகார் மனுவின் மீது ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர், துணை ஆணையர் பெருமாள் உத்தரவுப்படி விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் சீரஞ்சீவி ஆந்திரா மாநிலம் திருப்பதிக்குச் சென்று  ராஜேந்திரனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow