மடப்புரம் பாலம்கட்ட அளவிடும் பணி தொடக்கம் -திருவாரூர் எம்.எல்.ஏ ஆய்வு
புதிய பேருந்துநிலையம் வழிசெல்லும் நெடுஞ்சாலையினை இணைக்கும் பாலம் கட்டுவதற்கான அளவிடும் பணி நடைபெற்றது.
திருவாரூர் மடப்புரம் பாலம்கட்ட அளவிடும் பணியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் நகரில் மடப்புரம் பகுதியைச்சேர்ந்த 16 வது வார்டு பொதுமக்கள் பழையபேருந்து நிலையம், பள்ளி, கல்லூரி, மார்க்கெட், ரயில்நிலையம், மருத்துவமனை என செல்ல 3 கிலோமீட்டர் சுற்றி சென்று வந்த நிலையில் ஒரு நடைபாலம் மட்டும் உள்ளது. இதில் அவசர காலங்களில் கூட வாகனங்கள் செல்ல முடியாது. இந்நிலையில் 30 ஆண்டுகளாக வாகனங்கள் செல்ல பாலம் கட்டிதர தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் பரிந்துரையின்படி நகராட்சிநிர்வாகம், நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதல் பெறப்பட்டு 36 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்துடன் பாலம் கட்ட ரூபாய் 4 கோடியே 6 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு திருவாரூர் மடப்புரத்திலிருந்து பழைய பேருந்துநிலையம், புதிய பேருந்துநிலையம் வழிசெல்லும் நெடுஞ்சாலையினை இணைக்கும் பாலம் கட்டுவதற்கான அளவிடும் பணி நடைபெற்றது.
இப்பணியினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், நகராட்சி நியமன குழுஉறுப்பினர், வாரைபிரகாஷ் , நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.என்.அசோகன், டி.செந்தில், திட்டக்குழு உறுப்பினர் இரா.சங்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.
What's Your Reaction?