GOAT: கோட் படத்தில் விஜய்யோட கேரக்டர் இதுதானா..? சஸ்பென்ஸ் அப்டேட்டை போட்டுடைத்த மாநாடு பிரபலம்!
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் விஜய்யின் கேரக்டர் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: விஜய்யின் கோட் படத்தின் ரிலீஸ் தேதியை தொடர்ந்து, ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலும் வெளியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து கோட் படத்தில் இருந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகவுள்ளன. இதற்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்தப் படத்தில் அவரது கேரக்டர் என்ன என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நியூ இயர் ஸ்பெஷலாக கோட் படத்தில் இருந்து விஜய்யின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகின.
அதன்பின்னர் பொங்கல் ஸ்பெஷலாக கோட் மூன்றாவது போஸ்டர் வெளியானது. அதில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் மெஷின் கன் உடன் செம்ம மாஸ்ஸாக கெத்து காட்டினர். இதனால் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் நால்வரும் ஒரே கேங் என்பது மட்டும் உறுதியானது. அதேபோல் இவர்கள் நான்கு பேரும் மங்காத்தா அஜித்தின் கேங் போல ஆன்டி-ஹீரோஸ் கெட்டப்பில் சம்பவம் செய்வார்கள் என ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, விஜய்யின் துப்பாக்கி படத்தின் இன்னொரு வெர்ஷனாக கோட் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் நால்வரும் சிபிஐ ஆபிஸர்ஸ் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது. இதனை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் கூறியுள்ளார்.
சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மாநாடு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் ஒய்ஜி மகேந்திரன். அதனைத் தொடர்ந்து விஜய்யின் கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவரது காட்சிகள் அனைத்தும் விஜய்யுடன் தான் எனக் கூறிய அவர், நான்கு, ஐந்து இளம் சிபிஐ ஆபிஸர்கள் கேரக்டரில் எனக்கும் சின்ன ரோல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI டெக்னாலஜி மூலம் நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிகளும் விஜய்யுடன் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் சிபிஐ ஆபிஸராக நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?