GOAT: விஜய்யின் GOAT-ல் இணையும் CSK டீம்… வெங்கட் பிரபுவின் வேற லெவல் பிளான்… போட்றா வெடிய!
விஜய்யின் கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிரபலங்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதற்காக இயக்குநர் வெங்கட் பிரபு உட்பட படக்குழுவினர் ரஷ்யா சென்றுவிட்டனர். அங்கு விஜய் சம்பந்தமான காட்சிகளை படமாக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளார். விஜய் தவிர மேலும் சில நடிகர்கள் ரஷ்யா படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. முன்னதாக கோட் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரம் பகுதிகளில் நடைபெற்றிருந்தது.
இதற்காக கேரளா சென்ற விஜய்யை மல்லுவுட் ரசிகர்கள் எப்படியெல்லாம் வரவேற்று கொண்டாடினர்கள் என்பதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது. இந்த ஆரவாரத்தில் பலருக்கும் தெரியாத சம்பவம் ஒன்று கோட் படப்பிடிப்பில் நடந்துள்ளது. அதாவது இதில் வெங்கட் பிரபுவும் கேமியோவாக நடித்துள்ளாராம். எப்போதுமே தான் இயக்கும் படங்களில் எதாவது ஒரு சீனில் வந்து தலைக்காட்டுவது வெங்கட் பிரபுவின் வழக்கம். ஆனால் கோட் படத்தில் கேமியோவாகவே நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகராக வெங்கட் பிரபு நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதோடு இன்னொரு சர்ப்ரைஸும் கோட் படத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, டிஜே பிராவோ இருவரும் கோட் படத்தில் கேமியோவாக நடிக்கவுள்ளார்களாம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் எனவும் சொல்லப்படுகிறது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் கோட் படத்தில், விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, அஜ்மல், யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். யுவன் இசையில் விரைவில் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கோட் படத்தில் ரெய்னா, பிராவோ இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?