புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் தங்கம் ரூ. 54,440.. எப்போது விலை குறையும்?

தங்கத்தின் விலை தினசரியும் உயர்ந்து வரும் நிலையில் ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.640 உயர்ந்து 54,440 ஆக விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஏப்ரல் 11 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Apr 12, 2024 - 10:07
புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் தங்கம் ரூ. 54,440.. எப்போது விலை குறையும்?

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கலக்கமடைய வைத்தள்ளது. 

ஏப்ரல் 10 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,725-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ஏப்ரல் 12 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,805க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 4000 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,557க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,592க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.90க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விலை உயர்ந்து வருவதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூன் மாதத்தில் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8000ஐ எட்டும் என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லையா என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கவலையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow