இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி.. உச்சத்தை எட்டிய தங்க விலை...
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.55,000ஐ நெருங்கியுள்ளதால் ஏழை, எளிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி தங்கவிலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் அடுத்தடுத்து தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி சவரனுக்கு160 உயர்ந்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது.
இந்த நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,780-க்கும், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்து ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்களை தொடுத்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அந்த வகையில் இன்று (ஏப்ரல் 14) 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6855-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.600 உயர்ந்து ரூ.54,840-க்கு விற்கப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.4000க்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கம் உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் கவலையடைந்துள்ளனர்.
What's Your Reaction?