கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.240 குறைவு

நாள்தோறும் கண்ணாமூச்சி ஆடி வருகிறது தங்கம் விலை. நேற்றைய தினம் சவருனுக்கு ரூ. 640 உயர்ந்த நிலையில், இன்றைய தினம் சவரனுக்கு கூ.240 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது. 

கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.240 குறைவு
Gold prices plunge

தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,25) ஆபரண தங்கம் கிராம், 11,720 ரூபாய்க்கும், சவரன், 93,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 174 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,26) தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 11,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 94,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 176 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (நவ.,27) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் விலை ஏற்ற, இறக்கத்தை வைத்து தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிர்ணயம் நிலை இல்லாமல் இருந்து வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow