தவெகவில் செங்கோட்டையன் "ஐக்கியமானார்" – நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் பதவி ?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த செங்கோட்டையன், இன்று விஜய் தலைமை ஏற்று தவெகவில் ஐக்கியமானார்.
அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையன். அடுத்து என்ன செய்ய போகிறார் என தமிழக அரசியலில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் தனது கோபிசெட்டி பாளைய எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் காலையில் ராஜினாமா செய்தார்.
அமைச்சர் சேகர்பாபு செங்கோட்டையன் சந்தித்த நிலையில், திமுகவில் அவர் இணையக்கூடும் என செய்திகள் உலா வந்தன. ஆனால்,மாலையில் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்திற்கு சென்ற செங்கோட்டையன். அங்கு சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருந்தார்.
அப்போது செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்று கொள்வதாக செங்கோட்டையன் சம்மதம் தெரிவித்தாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி, நேற்றைய ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற வாக்குறுதியை மட்டும் கொடுங்கல், மற்றவர்களை நான் அழைத்து வருகிறேன் என விஜயிடம் செங்கோட்டையன் கேட்டு இருக்கிறார். அதற்கு விஜய் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாம்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வருகை தந்தார். அங்கு காத்து கொண்டிருந்த விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் ஐக்கியம் ஆனார்.
What's Your Reaction?

