வரலாறு காணாத உச்சத்தை தொடும் தங்கம் விலை.. இன்றும் விலை உயர்வு...

கடந்த 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று  மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Mar 7, 2024 - 10:42
வரலாறு காணாத உச்சத்தை தொடும் தங்கம் விலை.. இன்றும் விலை உயர்வு...

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.400 வரை உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,090-க்கும் விற்பனையாகிறது. 

தங்கத்தின் விலையைப் போன்று வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.0.50காசுகள் உயர்ந்து ரூ.78.50-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1,280 தங்க விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால், இதனால் தங்கம் வாங்குவோர் கலக்கத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow