தங்கத்தின் விலை சற்று உயர்வு: வெள்ளி விலை மாற்றமில்லை

வாரத்தின் தொடக்க நாளே தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதே நேரம் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை சற்று உயர்வு: வெள்ளி விலை மாற்றமில்லை
தங்கத்தின் விலை சற்று உயர்வு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை  2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலைக்கு கிராம் ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் இன்றைய தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow