ஆட்டம் காட்டும் தங்கம் : சவரன் ரூ 400 உயர்வு:வெள்ளி விலை புதிய உச்சம்
தங்கம், வெள்ளி விலை நாள் தோறும் ஏற்றம் இறக்கத்துடன் தொடர்கிறது. நேற்றைய தினம் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்துள்ளது.
நேற்றைய முன்தினம் காலை மாலை என இருமுறை தங்கத்தின் விலை உயர்ந்தது. இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் தங்கம் சவரன் 1 லட்ச ரூபாயை தொட்டது. இது நகைப்பிரியர்களை கடும் அதிர்ச்சிக்குளாகியது.
இந்த நிலையில்,நேற்றைய தினம் தங்கம் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது.
இதன் போன்று நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.211-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,400-க்கும், சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11-ம், கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.222-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
What's Your Reaction?

