தமிழ்நாட்டில் சம்பவம்.. குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்.. சென்னை ஜில் ஆகுமா?

தமிழகத்தில் அடுத்த 4, 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கிழக்கு திசை காற்றின் காரணமாக நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

Apr 12, 2024 - 13:49
தமிழ்நாட்டில் சம்பவம்.. குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்.. சென்னை ஜில் ஆகுமா?

தமிழ்நாட்டில் அரசியல் களம் அனலாக இருக்கிறது. அதே போல பங்குனி மாத வெயிலும் பட்டையை கிளப்புகிறது. சென்னையில் டிசம்பர் மாதத்துடன் மழைக்காலம் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதத்திலேயே கோடை காலம் தொடங்கி விட்டது. மார்ச் மாதம் முழுவதுமே மழைக்கான அறிகுறி தென்படவில்லை. வறண்ட வானிலைதான் நிலவியது. 

ஏப்ரல் மாதத்தில் ஆங்காங்கே மழை பெய்து குளுமை பரவினாலும் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தென் தமிழகத்தில் பல ஊர்களிலும் மழை பெய்து மக்களின் மனங்களை மகிழ்வித்து வருகிறது. இதனிடையே சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக கூல் செய்தி ஒன்றை கூறியிருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், வறண்ட மற்றும் வெப்பமான மழை குறைவான மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் முதல் பாதிக்குப் பிறகு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு ஒரு நல்ல செய்தி உள்ளது என பதிவிட்டுள்ளார்.

டெல்டா, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, கேரளா, கடலோர மற்றும் உள் கர்நாடகா, உள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு நல்ல செய்தி என்றும் பதிவிட்டுள்ளார். நீண்ட கிழக்கு திசை காற்றின் காரணமாக, அடுத்த 4-5 நாட்களில் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் ஆனால் கிழக்கு திசை காற்றின் காரணமாக வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். பெங்களூரில் ஒன்று அல்லது 2 நாட்களுக்கு மழை பெய்யும். 

மழைக்கான ஹாட்ஸ்பாட்கள் என தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், அடுத்த 4-5 நாட்களில் இந்தப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் வெதர்மேன் பிரதீப்ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow