நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ் : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 110 குறைந்துள்ளது. வார துவக்கத்தில் தங்கம் விலை குறைந்த்தால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது.இதனால் நகைப்பிரியர்கள் தங்கம் வாங்க அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில்,சென்னையில் வார தொடக்க நாளான இன்று (நவ.,24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 சரிந்து, ஒரு சவரன் ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11, 520க்கு விற்பனை ஆகிறது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (நவ.,24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 சரிந்து, ஒரு சவரன் ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11, 520க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று காலை கிராம் ஒரு ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 171-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

