சாலை விபத்தில் பறிபோன உயிர்.. வாணியம்பாடி காவலரின் கண்கள் தானம் !

அண்ணமாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Apr 30, 2024 - 13:13
சாலை விபத்தில் பறிபோன உயிர்.. வாணியம்பாடி காவலரின் கண்கள் தானம் !

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்த காவலரின் கண்கள் தானம் செய்யப்பட்டது. 

தானத்தில் சிறந்த தானம் கண் தானம் என்பார்கள். ஏனெனில் இந்த உலகில் உள்ள பல விஷயங்களை காணவும், ரசிக்கவும் கண்கள் தான் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.  இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்(ஏப்ரல் 28) அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்தபோது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணமாலையும், அவரது நண்பரும் படுகாயமடைந்து, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், அண்ணமாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow