முதல் பக்கம் திரைப்பட விமர்சனம்.. பட்டய கிளப்பும் தம்பி ராமையா!
8 தோட்டக்கள் திரைப்பட புகழ் வெற்றி, தம்பி ராமையாவின் கூட்டணியில் வெளியாகியுள்ள சென்னை பைல்ஸ் “முதல் பக்கம்” திரைப்படத்தின் விமர்சனம் காண்க.

8 தோட்டக்கள், ஜீவி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்ந்த இளம் நடிகர் வெற்றியின் நடிப்பில் தற்போது திரையில் வெளியாகியுள்ள திரைப்படம் ”முதல் பக்கம்”. இப்படமும் இவரது வழக்கமான த்ரில்லர் பாணியில் தான் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த குமுதம் விமர்சனம் காண்க.
பிரபல நாவலாசிரியர் ஒருவரது மகன் வெற்றி. தன் தந்தையைப் பற்றி ஒரு தொடர் எழுதப்போகும் பத்திரிகையாளர் ஷில்பா மஞ்சுநாத்தை சந்திப்பதற்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் செயின் திருடன் ரெடின் கிங்ஸ்லியால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவிடம் சிக்குகிறார், வெற்றி.
வெற்றி யாரெனத் தெரிந்ததும் அவருடன் நட்பாகிவிடும் தம்பி ராமையா, வெற்றியின் துப்பறியும் திறமையைப் பார்த்து வியந்து, அப்போது சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளுக்குக் காரணமான கொலைகாரனைப் பிடிப்பதற்கு அவரின் உதவியைக் கேட்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்தக் கொலைகாரனை எப்படி பிடிக்கிறார்கள் என்பது தான் கதை.
திரைக்கதையில் தம்பி ராமையாவுக்கென தனி கதையை கிளைமேக்ஸில் இயக்குநர் அனிஷ் அஷ்ரஃப் சொருகி இருப்பது நல்ல ட்விஸ்ட் மட்டுமல்ல, மனதை நெகிழ வைக்கும் சென்டிமென்ட்டும் கூட. வெற்றி-ஷில்பா மஞ்சுநாத் ரொமான்ஸ் ஜிலீர். படம் முழுக்க தம்பி ராமையா பட்டய கிளப்புகிறார். சீரியல் கில்லராக வரும் வில்லன் உருவத்தில் டெரர், குரல்தான் குழந்தை மாதிரி இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லியின் காமெடி நல்ல கலகலப்பு. ஒளிப்பதிவு, இசை ஓகே.
சீரியல் கில்லர் கொலை செய்வதற்கான காரணம் சில்லி. ஷில்பா மஞ்சுநாத்தை எதுக்கு சீரியல் கில்லர் தூக்குகிறான்? அவனிடம் தப்பித்த பின் ஏன் ஷில்பா தலைமறைவானார்? என்பதெல்லாம் பெரும் குழப்பம். ரெண்டு காலேஜ் பசங்க, சக மாணவியைக் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வ தெல்லாம் கொஞ்சம் ஓவர்.
What's Your Reaction?






