"மனம் கனிந்த வாழ்த்துகள்" - இபிஎஸ்-க்கு ஆளுநர் பிறந்தநாள் வாழ்த்து !

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து

May 12, 2024 - 16:14
"மனம் கனிந்த வாழ்த்துகள்" - இபிஎஸ்-க்கு ஆளுநர் பிறந்தநாள் வாழ்த்து !

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட பல தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

70-வது பிறந்தநாளை கொண்டாடும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர், தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தனது மனம் கனிந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், இந்த இனிய தருணத்தில் உடல் நலனும், மகிழ்ச்சியும் வாழ்நாள் முழுவதும் கிடைக்க பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார். 

இதேபோல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்த்து செய்தியில், "நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்கிறேன்" என தெரிவித்தார். 

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow