வாழப்பாடி அருகே லாரி-ஆட்டோ மோதி பயங்கர விபத்து-3 பேர் உயிரிழப்பு
விபத்து நடந்த இடத்திலும் ரோடு குறுகலாக சர்வீஸ் ரோடு பிரியும். அந்த குழப்பத்தில் வேகத்தில் வரும் வாகனங்கள் மோதி இப்படி உயிர்பலி ஆகிவிடுகிறது.
வாழப்பாடி அருகே லாரி மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இருக்கிறது வாழப்பாடி. வாழப்பாடியில் வெளியில் உள்ள பைபாஸ் ரோட்டில் இருக்கிறது ஒரு மேம்பாலம். காலையில் மேம்பாலத்தில் சென்னையில் இருந்து ஒரு பிக் அப் ஆட்டோ வந்திருக்கிறது. சேலத்திலிருந்து ஆத்தூருக்கு ஈச்சர் லாரி ஒன்று லோடுடன் சென்று இருக்கிறது.
இன்று காலை 9 மணிக்கு ஆட்டோவும்- லாரியும் மேம்பாலத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிகொண்டன.இதில் பிக் அப் ஆட்டோவில் இருந்த பிரவீன்குமார், சுதர்சன்,பிரகாஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலியே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாழப்பாடி போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'வாழப்பாடி, ஆத்தூர் வெளி பைபாஸ் சாலை விரிவுபடுத்தி நான்கு வழிசாலையாக போடவில்லை. இரு வழிசாலையாகத்தான் போட்டார்கள்.அதனால் ஏகப்பட்ட விபத்து நடக்கிறது. விபத்து அடிக்கடி நடப்பதால் தற்போது நான்கு வழிசாலையாக விரிவுபடுத்தும் வேலை நடக்கிறது.நான்கு வழி சாலை பணியை விரைவாக முடிக்க வேண்டும்.விபத்து நடந்த இடத்திலும் ரோடு குறுகலாக சர்வீஸ் ரோடு பிரியும். அந்த குழப்பத்தில் வேகத்தில் வரும் வாகனங்கள் மோதி இப்படி உயிர்பலி ஆகிவிடுகிறது. இறந்தவர்களின் முழு விபரம் கிடைக்கவில்லை.அவர்களது குடும்பம் எவ்வளவு துன்பபடுமோ.' என்று பரிதவிப்போடு சொல்கின்றனர்.
What's Your Reaction?