எறும்பு தின்னி செதில்களைத் தின்றால் ஆண்மை விருத்தி? 

ஆண்மை விருத்தி அடையும் என்பது பொய்

Dec 15, 2023 - 13:42
Dec 15, 2023 - 17:41
எறும்பு தின்னி செதில்களைத்  தின்றால் ஆண்மை விருத்தி? 

எறும்பு தின்னி செதில்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
           
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மிகப்பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷன்களில் ஒன்று.தென் மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். மருத்துவ குணம் மிக்க இத்தண்ணீரில் குளித்தால் நோய்கள் பறந்து விடும் என்பது நம்பிக்கை.

எனவே மாநிலம் முழுவதிலும் இருந்து பயணிகள் இங்கு குளிக்க வருவது வழக்கம்.பயணிகளை குறிவைத்து ஏமாற்றும் கூட்டமும் பெருகியிருக்கிறது. அண்மையில் அருவி பகுதியில் மசாஜ் ஆயில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. 100 கிராம் பாட்டில் 200 ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள்.

இது ஒரு மூலிகை ஆயில் என்று புருடா விட்டதால் அனைவரும் வாங்கியிருக்கிறார்கள். கடைசியில் அது சாதாரண ஆயில் என்று தெரிய வரவும், போலீஸ் அந்த போலி வியாபாரிகளை வார்ன் பண்ணி விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆண்மை விருத்திக்கு எறுப்பு தின்னி செல்கள் சிறந்தது என்று ஒரு கும்பல்  பயணிகளிடம் விற்று வருவது தெரியவந்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர்  மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து வனவர் முத்துகிருஷ்ணன் கூறுகையில்,“ குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சிலர் எறும்பு தின்னி செதில்களை விற்று வருவதாய் சுற்றுலா பயணி ஒருவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்று பார்த்தோம். அங்கு மூன்று  பேர் தரையில் விரிப்புகளை விரித்து எறும்பு தின்னியின் செதில்களை விற்றுக் கொண்டிருந்தனர். இதை பொடி பண்ணி சாப்பிட்டால் ஆண்மை விருத்தி அடையும், நீண்ட நேர உறவுக்கு நல்லது என்று கூறி விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பிடித்து விசாரித்தோம்.

ராமர், சின்ராசு, அந்தோணி ஆகிய மூன்று பேர்களே அவர்கள், இவர்களுக்கு நெல்லை பக்கம் செழிய நல்லூர் கிராமமே சொந்த ஊர். அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் போய் எறும்பிதின்னிகளை பிடித்து கொன்று செதில்களை மட்டும் தனியே எடுத்து விற்றிருக்கிறார்கள். அழிந்து வரும் இனமான எறும்பிதின்னியை கொல்வது மிகப்பெரிய குற்றம். எனவே அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு கைது செய்து சிறையிலும் அடைத்திருக்கிறோம் என்றார். இது குறித்து சித்த மருத்துவர் ரமேஷீடம் பேசினோம்.”எறும்பு தின்னியின் செதில்களுக்கு மருத்துவ குணம் உண்டு.அதை பொடி பண்ணி சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.ஆண்மை விருத்தி அடையும் என்பது பொய்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow