தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான  பனிப்பொழிவு

கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.

Dec 7, 2023 - 12:52
Dec 7, 2023 - 15:15
தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான  பனிப்பொழிவு

தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான  பனிபொழிவால் வாகன ஒட்டிகள் அவதி

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான மூடுபனி மற்றும் குளிர் நிலவியது.பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான மூடுபணியால் முன்னால் செல்லும் ஆட்கள் தெரியாத அளவிற்கு மூடுபனி நிலவியது.

 அதியமான்கோட்டை, தொப்பூர் நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் தொடங்கியது போலவே காலை 8 மணியை கடந்தும் பனி மூட்டம் குறையவில்லை.

சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது.இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.

 மேலும் கார்த்திகை மாதத்தில் இன்று அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவியது.தற்பொழுது நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி சீதோசன நிலையானது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் நிலவுவது போல உள்ளது.

-பொய்கை கோ.கிருஷ்ணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow