ஸ்ரீபெரும்புதூர் வெள்ள பாதிப்பு -.பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு

வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை அரசிற்கு அனுப்பி வைக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Dec 7, 2023 - 16:16
Dec 8, 2023 - 14:56
ஸ்ரீபெரும்புதூர் வெள்ள பாதிப்பு -.பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இதில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சில பகுதிகளை தவிர பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 

இந்நிலையில் மழை வெள்ளத்தால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 10 சாலைகள், மூன்று கல்வெட்டுகள் சேதம் அடைந்துள்ளன.இந்தநிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுளாது. 

இதனையடுத்து பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா, உதவி இயக்குனர் லதா, உதவி பொறியாளர் செண்பகவல்லி, பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீக்கு காலனி, ஜெமி நகர், காந்தி சாலை ஆகிய பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை அரசிற்கு அனுப்பி வைக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow