"சிவில் நீதிபதிகளின் தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து" TNPSC-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருத்தப்பட்ட பட்டியலை 2 வாரத்திற்குள் வெளியிடுமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Feb 29, 2024 - 21:09
"சிவில் நீதிபதிகளின் தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து" TNPSC-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இடஒதுக்கீடு முறையில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களை காட்டி தொடரப்பட்ட வழக்கில் புதிய பட்டியலை 2 வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில், காலியான 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு,  6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதியும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் மெயின் தேர்வும் நடத்தப்பட்டது. இதில் 472 பேர் நேர்முக தேர்வுக்கு கடந்த ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இவர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின பெணான ஸ்ரீபதி, தூத்துக்குடியில் மணல் கடத்தல் விவகாரத்தில் கொல்லப்பட்ட விஏஓ-வின் மகன் மார்ஷல் ஏசு வடியான் உட்பட 245 பேர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இடஒதுக்கீடு முறையில் குளறுபடி, அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களை பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில், சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, திருத்தப்பட்ட பட்டியலை 2 வாரத்திற்குள் வெளியிடுமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow