நாட்டு வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி படுகொலை... வண்டலூரில் பயங்கரம்...

Feb 29, 2024 - 22:08
நாட்டு வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி படுகொலை... வண்டலூரில் பயங்கரம்...

வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டாங்கொளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆராமுதனை 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் நாட்டு வெடுகுண்டு வீசியும், சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை ( மார்ச் 1) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வண்டலூர் மேம்பாலம் அருகே சிறு பேருந்து நிழற்குடை புதிதாக அமைக்கபட்டு நாளை திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகளை ஆய்வு செய்வதற்காக தனது ஸ்கார்பியோ காரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணைத்தலைவருமான ஆராமுதனை வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் முதலில் கார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். அது மிகுந்த சத்ததுடன் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. இதையடுத்து அந்த கும்பல் காரை விட்டு இறங்கி ஓடிய ஆராமுதனை விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆராமுதனின் இருகைகளும் துண்டாகின. மேலும் தலை, முகம், முதுகு என பல்வேறு இடங்களில் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.  இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய  ஆராமுதனை மீட்ட அக்கம் பக்கத்தினர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  ஓட்டேரி போலீசார் வெட்டிவிட்டு தப்பியோடிய நபர்களை பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.  முதல் கட்ட விசாரணையில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து, முன்விரோதம், சொத்து பிரச்னை போன்றவற்றில் ஆராமுதனுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பல ஆண்டுகாலம் திமுகவின் முன்னோடியாக இருந்த ஆராமுதன் பொது வெளியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டு தீயாய் பரவியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow