வர்த்தக சிலிண்டர்கள் விலை குறைப்பு... வணிக நிறுவனங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சொன்ன குட் நியூஸ்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல், வணிக நிறுவனங்களை நடத்துபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

May 1, 2024 - 10:40
வர்த்தக சிலிண்டர்கள் விலை குறைப்பு... வணிக நிறுவனங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சொன்ன குட் நியூஸ்

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணையித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

இதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோக பயன்பாடு என இரண்டு வகைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை  செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்துக்கும், 19 கிலோ கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கான பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.818.50 ஆகவே நீடிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow