நண்பனுக்கே அல்வா கொடுத்த பலே கில்லாடி..! மொத்தமாக ரூ.66 கோடி அபேஸ்..! தட்டித் தூக்கிய போலீசார்..
Forex trading, மாதம் மாதம் கமிஷன் என கல்லூரி நண்பனுக்கு ஆசை வார்த்தை கூறி 66 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய கில்லாடி நண்பனை ஆவடி வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Forex trading, மாதம் மாதம் கமிஷன் என கல்லூரி நண்பனுக்கு ஆசை வார்த்தை கூறி 66 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய கில்லாடி நண்பனை ஆவடி வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் அவரது நண்பரான கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில், அட்வைசர் அண்ட் கன்சல்டிங் என்ற பெயரில், வெளிநாடுகளில் ஆன்லைன் டிரேடிங் செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதில் விஜய்யின் கல்லூரி நண்பரான முகமது அமீன், சமீபத்தில் இவர்களை சந்தித்து பழக்கமாகியுள்ளார். அவரிடம் விஜய், தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் ரூ.4,000 லாபமாக வழங்கப்படும் எனவும், லாபத் தொகையுடன் ஒரு வருடத்தில் முதலீடு செய்த தொகையையும் திருப்பி செலுத்திவிடுவோம் எனவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனை நம்பிய அமீன், தனது நண்பர்கள், உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோரை விஜய்யின் நிறுவனத்தில் சேர்த்து விட்டுள்ளார். ஆமீனைப் போல சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.65.98கோடியை முதலீடாக பெற்ற விஜய் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் ஏமாற்றியுள்ளனர். முதலீட்டில் பெற்ற பணத்தை இருவரும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி, அவர்களது நண்பர்கள் மூலம் ஆன்லைன் ஆப் ஒன்றை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி உள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமீன் இது குறித்து மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த விஜய்யை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க :
https://kumudam.com/Rest-for-Bumrah...KL-Rahul-removed..-Indian-team-announcement-for-Ranchi-Test
What's Your Reaction?