அதெப்படி 5வது வீரர அவர்கள் பயன்படுத்தலாம்..? நடுவர்களிடம் வம்பு செய்த பாண்டிங், கங்குலி..!
ஐபிஎல்லின் விதிமுறையின் படி ஒரு அணி 4 வெளிநாட்டு வீரர்களை மட்டும் தான் போட்டியின்போது பயன்படுத்த முடியும்.
ராஜஸ்தான் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் அணியின் இயக்குநர் கங்குலி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் பாதி முடிந்து 2ஆம் பாதி துவங்கிய போது, ராஜஸ்தான் அணியின் சார்பாக மாற்று வீரராக பவல் மைதானத்துக்குள் வந்தார். இதனை கண்டு குழம்பிய பாண்டிங் மற்றும் கங்குலி நடுவரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பர்கரை இம்பேக்ட் பிளேயராக ராஜஸ்தான் அணியினர் போட்டியில் பயன்படுத்தினர். இதனால் அணியில் ஏற்கனவே 4 வெளிநாட்டு வீரர்கள் இருக்கும் போது, எப்படி மாற்று வீரராக மற்றுமொறு வெளிநாட்டு வீரை கொண்டு வர முடியும் என்பது பாண்டிங்கின் வாதமாகும். ஐபிஎல்லின் விதிமுறையின் படி ஒரு அணி 4 வெளிநாட்டு வீரர்களை மட்டும் தான் போட்டியின்போது பயன்படுத்த முடியும். இதனை சுட்டிக்காட்டியே ரிக்கி பாண்டிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால், போட்டியின் போது ராஜஸ்தான் அணி 3 வெளிநாட்டு வீரர்களையே பயன்படுத்தியிருந்தனர். அதனால் இம்பேக்ட் வீரராக பர்கர் அணிக்கு வந்ததும், ஹெட்மெயர் வெளியேறினார். அதைதொடர்ந்து 4வதாக பவல் மாற்று வீரராக வந்தார்.
அணியில் ஏற்கனவே 4 வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என பாண்டிங் எண்ணிக்கொண்டதே இந்த குழப்பங்களுக்கு காரணம். இதையடுத்து நடுவர், பாண்டிங்கிற்கும் - கங்குலிக்கும் அணியில் 5 அல்ல 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர் என எடுத்துக்கூறி விளக்கமளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?