ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்.. ஆவணங்கள் இல்லையென்றால் அவ்வளவுதான்... தேர்தல் பறக்கும் படை அதிரடி..!
தங்க நகைகளையும், வேனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விராலிமலை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிவிசி லாஜிஸ்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி தங்க நகைகள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
அதைதொடர்ந்து தங்க நகைகளையும், வேனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின், அரசு அலுவலர்கள் முன்னிலையில் தங்க நகைகள் கணக்கிடப்பட்டு பட்டியலிடப்பட்டது.
அப்போது, அதில் 1,200 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 60 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை இலுப்பூர் அரசு கருவூலத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?