ஷோயப் பஷீர்: பாகிஸ்தானை வம்சாவளி சுழலர், இங்கிலாந்தின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக மாறியது எப்படி?

Feb 24, 2024 - 17:51
Feb 24, 2024 - 18:27
ஷோயப் பஷீர்: பாகிஸ்தானை வம்சாவளி சுழலர், இங்கிலாந்தின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக மாறியது எப்படி?

ராஞ்சி டெஸ்டில் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பை உடைத்தவர், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர். 20 வயதேயான பஷீர்,  ஜெஸ்ஸ்வால், கில், படிதார், ஜடேஜா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்க பூமியான இந்தியாவில் ஒரு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்துவீசுவது, ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. 2011-12 இந்திய சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியதற்கு ஸ்வான் - பனேசர் கூட்டணிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.

நடப்பு டெஸ்ட் தொடரில், ஹார்ட்லி, ரெஹான் அஹமது ஆகியோர் வரிசையில் தற்போது பஷீரும் முத்திரை பதித்துள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி வீரர்  என்பதால் இந்தியாவுக்கு விசா கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸும் தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சுழலுக்கு சாதகமான ராஞ்சி டெஸ்டில் பஷீர் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக 31 ஓவர்கள் சளைக்காமல் பந்துவீசிய அவர், இதுவரை 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இந்த ஆண்டு ஜூனில் கவுண்டி கிரிக்கெட்டில் அறிமுகமான பஷீர், மொத்தமாக 18 தொழில்முறை ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். பஷீரின்  திறமையின் மீது நம்பிக்கை வைத்த  இங்கிலாந்து நிர்வாக இயக்குனர் ராப் கீ, அவரை இந்திய சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்தார்.

சர்ரே அகாடமியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய பஷீர், திறமை போதவில்லை என்று கூறி அங்கிருந்து  நீக்கப்பட்டார். இதையடுத்து, சில காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தவர், பின்னர் சோமர்செட் அணிக்காக தேர்வானார்.

சிறுவயதிலேயே ஏமாற்றத்தை சந்தித்து, அதிலிருந்து போராடி மீண்டு வந்தவர் என்பதால் பஷீர் மன உறுதிமிக்கவராக திகழ்கிறார் என்கிறார் ஜேசன் கெர்.

ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணி தலைமையேற்ற பிறகு அதாவது பேஸ்பால் யுகத்தில், ஒரு தொடரை கூட இங்கிலாந்து இழக்கவில்லை. 2-1 என்று இங்கிலாந்து, டெஸ்ட் தொடரில் பின்தங்கியுள்ள நிலையில் ஷோயப் பஷீரின் பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுத் தருமா?, ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணியின் வெற்றிப் பயணத்தை தொடரச் செய்யுமா? என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Mushir-Khan-set-a-new-record-in-the-Ranji-Cup-quarter-finals

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow