ரூ.7 லட்சம் ஆனியன் மூட்டைகள் அபேஸ் களவாணிகள் சிக்கியது எப்படி..?
சின்ன வெங்காயங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்ற நபர்கள், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த வெங்காய வியாபாரியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெங்காய மூட்டைகளை, போலி எண் கொண்ட லாரி மூலம் திருடிச்சென்றவர்களை போலீசார் தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர். அவர்கள் நூதன முறையில் திருடியது குறித்தும் சிக்கியது குறித்தும் பார்க்கலாம்...
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்காய வியாபாரியான பாலுசாமி. இவர் சின்ன வெங்காயங்களை தனியார் லாரி சர்வீஸ் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறார்.
இப்படி தூத்துக்குடிக்கு வெங்காயங்களை எடுத்துச்செல்ல தனியார் லாரி சர்வீஸை தொடர்ப்புக்கொண்டுள்ளார். இதேவேளையில், லாரி சர்வீஸ் நிறுவனத்தில் லாரி ஒன்று தூத்துக்குடி செல்வதாகவும், ஆர்டர் இருந்தால் ஏற்றிச்செல்வதாகவும் 2 நபர்கள் கூறியுள்ளனர். இதனால் இடைத்தரகராக செயல்படும் நிறுவனம் இருவருக்கும் தகவலை பறிமாறியது.
தொடர்ந்து பாலுசாமியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான சின்ன வெங்காயங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்ற நபர்கள், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். வெங்காய மூட்டைகளால் கண்களங்கிய வியாபாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சின்ன வெங்காய மூட்டைகளை கடத்தியவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபக்குமார் மற்றும் சரவணகுமார் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
லாரியில் போலி நம்பர் பிளேட் பொருத்தி வெங்காயங்களை திருடியதையும் கண்டுப்பிடித்ததுடன், தூத்துக்குடியில் பதுங்கியிருந்தவர்களையும் கைது செய்தனர். அதைதொடர்ந்து லாரியும் சின்ன வெங்காய மூடைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
What's Your Reaction?