தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் காவல் ஆய்வாளர்
பொருளாதார குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் தூக்கமாத்திரை, BP மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி 10 தூக்க மாத்திரை, 8 BP மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றுள்ளார். காவல்துறை எஸ்பி திட்டியதால் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு ஒன்றில் அறிக்கை தயார் செய்யும் போது ரூ.6 லட்சத்திற்கு பதிலாக, ரூ. 5 லட்சம் என எழுதியதை கண்டுபிடித்த பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பெண் காவல் ஆய்வாளரை எவ்வாறு குறைத்து கணக்கு காட்டலாம், உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற ரேணுகாதேவி, வீட்டில் அவரது தாயார் பயன்படுத்தி வந்த 10 தூக்க மாத்திரைகள் மற்றும் 8 BP மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் பெண் காவல் ஆய்வாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

