ஆபாசப் படங்கள் ஒளிபரப்பு... 18 ஓடிடி மற்றும் 19 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை!
விதிமுறைகளை மீறி ஆபாசப் படங்களை ஒளிபரப்பிய 18 ஓடிடி மற்றும் 19 இணையதளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.
விதிமுறைகளை மீறி ஆபாசப் படங்களை ஒளிபரப்பிய 18 ஓடிடி மற்றும் 19 இணையதளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.
ஓடிடி தளங்கள் ஆபாசப் படங்களை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் முன்னதாக எச்சரக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இந்தியாவில் ஆபாசப் படங்களை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள், 19 இணையதளங்கள், 10 மொபைல் செயலிகள் மற்றும் 57 சமூகவலைதளப் பக்கங்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.
ஐடி சட்டத்தை மீறி தவறான படங்களை வெளியிடுவது மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த மார்ச் 12 தேதி முதல் இந்த தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?