கேரளாவில் விரட்டி விரட்டி தாக்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்... இனவெறி காரணமா?
கேரளாவில் ஐவரி கோஸ்ட் கால்பந்தாட்ட வீரர் பார்வையாளர்களால் விரட்டி, விரட்டி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஐவரி கோஸ்ட் கால்பந்தாட்ட வீரர் பார்வையாளர்களால் விரட்டி, விரட்டி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் பல்வேறு கால்பந்து போட்டி தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜவஹர் மூவர் என்ற அணியில் டைரஸ்சவுபா ஹசானே ஜூனியர் என்ற ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தின் அரிக்கோடு நகரில் நடைபெற்ற செவன் ஃபுட்பால் என்ற தொடரில், ஜவஹர் மூவர் அணி கலந்துகொண்டது. அப்போது, கார்னர் வாய்ப்பிற்காக ஹசானே ஜூனியர் பந்தை அடிக்க முற்பட்டபோது அவருக்கு பின்னால் இருந்த எதிர் அணி வீரர்கள் சிலர் ஆப்ரிக்கா குரங்கு என்று இன ரீதியிலாக அவமானப்படுத்தியதோடு, கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அவர் மைதானத்தில் இருந்து வெளியே ஓட முயன்றபோது, அவரை விரட்டி சென்ற ரசிகர்கள் அடித்துத் துவைத்தனர்.
அப்போது, அவரது அணியைச் சேர்ந்த வீரர்கள் அவரை காப்பாற்றினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹசானே ஜூனியர் மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஹசானே ஜூனியரே காரணம் எனக் கூறப்படுகிறது, அவர் ரசிகர் ஒருவரைத் தாக்கியதாகவும், அதனாலேயே ரசிகர்கள் அவரை மீண்டும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?