கூட்டு பலாத்காரம்.. கர்ப்பமான 17 வயது சிறுமி.. திருப்பூரில் அதிர்ச்சி..  9 பேர் போக்சோவில் கைது

திருப்பூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

May 13, 2024 - 17:05
கூட்டு பலாத்காரம்.. கர்ப்பமான 17 வயது சிறுமி.. திருப்பூரில் அதிர்ச்சி..  9 பேர் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை உறவினர்கள் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். சிறுமி அளித்த தகவலின் பேரில் உறவினர்கள் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் ஜெய காளீஸ்வரன்( 19), மதன்குமார்( 19), பரணி குமார்( 21), பிரகாஷ் (24), நந்தகோபால்( 19 ), பவா பாரதி (22), மற்றும், 3 சிறுவர்கள் என உடுமலை பகுதியை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய மகளிர் போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர். 

இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு திரண்டு உரிய விசாரணை செய்யுமாறு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணைக்கு பின்னரே 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே கைது நடவடிக்கை ஒத்துழைப்பு அளிக்குமாறும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

17 வயது 9 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow