இடைக்கால பட்ஜெட் - 2024 ..! பெட்ரோல் டீசல் விலை குறையுமா?

Feb 1, 2024 - 11:49
Feb 1, 2024 - 17:10
இடைக்கால பட்ஜெட் -  2024 ..!  பெட்ரோல் டீசல் விலை குறையுமா?

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தொடர்  நேற்று கூடியது. நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் இந்த பட்ஜெட்டானது மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வெளிநாட்டு முதலீடுகள், வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்கள், தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள், என மத்திய அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

இன்னிலையில், இந்த  ஆண்டின் முதல் கூட்டத்தொடரான இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான திட்டங்கள்,  பெட்ரோல் டீசல் விலை குறைப்பு,  போன்ற முக்கிய திட்டங்கள் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலையானது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறிருக்க,  நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் வர இருப்பதால் மக்களை கவரும் வகையில் பல பட்ஜெட் திட்டங்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த பட்ஜெட் முக்கிய தேவையாக பார்க்கப்படும்.

இந்தியாவில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, எப்போதாவது பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பெரும்பாலும் விலை அதிகரிக்கப்பட்டே வந்தன பின்னர், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களே மாதந்தோறும்  அதன் விலையை நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டது. முதலில் மாதத்திற்கு இருமுறை மாற்றியமைக்கப்பட்ட விலையானது, 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது.
 

Petrol Diesel Price: Relief from inflation!! There may be a reduction of ₹  2 in the price of petrol and diesel..

பெட்ரோல் டீசல் மீதான இந்த விலை அதிகரிப்பானது மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பின் தாக்கமே எனலாம். பின்னர், 2021-ம் ஆண்டு இந்த விலை உயர்வானது திரும்பப்பெறப்பட்டது. அதன்பின் மீண்டும் விலையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. 2022 -ல் மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. மத்திய அரசை பின்பற்றி சில மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்ததால் மேலும் விலை குறைந்தன. 

இவ்வாறிருக்க இன்று நடைபெற இருக்கும் இந்த பட்ஜெட் தொடரின் மூலம் பெட்ரோல் டீசல் விலை 10 ரூபாய் குறைய வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் மூலம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் நகர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க   |  சிறை கொட்டடியில் இருந்து விடுபடவில்லை.. முருகன், ராபர்ட் பயஸ் முதல்வருக்கு கடிதம் !

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow