தங்கம் போல உயரும் தக்காளி விலை.. ஒரு கிலோ ரூ.100.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்
தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தக்காளி, வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி சில்லறை விலையில் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. காய்கறி கடைக்கு போன இல்லத்தரசிகளுக்கு விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு பட்ஜெட்டில் திடீரென துண்டு விழ ஆரம்பித்துள்ளது.
இன்றைய காய்கறி நிலவரம் மொத்த விற்பனை & சில்லறை விற்பனை:
1. தக்காளி 1 கிலோ மொத்த விலை ரூ.60 சில்லறை விலை ரூ.100
2. வெங்காயம் மொத்த விலை 1 கிலோ ரூ.30 சில்லறை விலை ரூ. 60
3. கத்தரிக்காய் ரூ.30
4. பீட்ரூட் ரூ.35
5. அவரைக்காய் ரூ.80
6.கேரட் ரூ.55
7. சவ்சவ் ரூ.50
8. பச்சை மிளகா ரூ.40
9. சேனை கிழங்கு 70
10. இஞ்சி ரூ.160
11. குடைமிளகாய் ரூ. 80
12. உருளைக்கிழங்கு ரூ.30,35
13. சின்ன வெங்காயம் ரூ.80,90
14. முருங்கை காய் ரூ.80
15. வெண்டைக்காய் ரூ.40
16.சுரைக்காய் ரூ.10
17 எலுமிச்சம்பழம் ரூ.100
18.கோஸ் ரூ.40
19.முள்ளங்கி ரூ.40
20.மாங்காய் ரூ.60
21.பீன்ஸ் ரூ.100
22.தேங்காய் 1 கிலோ ரூ.36
23. புடலங்காய் ரூ.20
கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் ரேசன்கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டு பசுமை பண்ணை காய்கறி கடைகளிலும் ரேசன் கடைகளிலும் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
What's Your Reaction?