திமுக கூட்டணி உடைகிறதா? தவெக பக்கம் காங்கிரசை இழுத்து செல்லும் பிரவீன் சக்ரவர்த்தி
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசை பிரித்து கொண்டு வந்து, தவெக பக்கம் கொண்டு செல்லும் வேலையை பிரவீன் சக்ரவர்த்தி செய்து வருவதாக தமிழக காங்கிரசு தரப்பிற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அரசு வாங்கிய கடன் குறித்து விமர்சனம், அதிகாரத்தில் பங்கு என கூட்டணிக்குள் அடுத்தடுத்த குண்டுகளை காங்கிரசு வீசி வருகிறது. இதற்கு திமுக தரப்பில் இருந்து தாமதம் இல்லாம் பதிலடி கொடுக்கப்படுகிறது. ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோர் தொடர்ந்து திமுகவை சீண்டும் வகையில் பதிவிட்டு, பேசி வருவது அறிவாலயத்தை சூடோற்றி வருகிறது.
தவெக விஜயுடன் ரகசிய சந்திப்பை நடத்திய பிரவீன் சக்ரவர்த்தி, இந்த சந்திப்பு குறித்த வெளியில் பேசாமல் இருந்தார். இந்த நிலையில், இன்று, சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் அவர் அளித்த பேட்டியில்: தவெக தலைவர் விஜயை சந்தித்தீர்களா, அந்த சந்திப்பு குறித்து ஏதாவது பேசப்பட்டதா? மறுபடியும் சந்திக்க வாய்ப்பு ஏதும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரவீன் சக்கரவர்த்தி, சந்தித்தேன். அவ்வளவு தான் சொல்வேன். என சுருக்கமாக கூறினார்.
தமிழகத்தை உத்தரபிரதேசம் உடன் ஒப்பிட்டு நிதிநிலை அறிக்கை குறித்து நீங்கள் வெளியிட்டது சர்ச்சை ஆகி உள்ளது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என நிருபர்கள் கேட்டதற்கு,
சர்ச்சை ஒன்றும் இல்லை. உத்தரபிரதேசம் பற்றி ஒப்பிடவில்லை. தமிழகத்தின் கடன் சூழ்நிலை பற்றி, ரிசர்வ் வங்கி என்ன சொல்லி இருக்கிறது என்று அது பற்றி தான் எடுத்து சொன்னேன். கருத்துக்கணிப்பு அவ்வளவு தான். என அவர் கூறினார்.
பல தலைவர்கள் உடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. கூட்டணி குறித்து உங்கள் கருத்து என்ன? என நிருபர்கள் மீண்டும் கேட்டதற்கு, கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் என பிரவீன் சக்கரவர்த்தி பதில் அளித்து கிளம்பி சென்றார்.
இதனிடையே கடந்த 4-ம் தேதி சத்தியமூர்த்திபவனில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அகில இந்திய தலைவர் அனில் ஜெய்ஹிந்த், காங்., அகில இந்திய செயலர் ஜிதேந்திர பாகேல், தமிழக காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் நவீன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அக்கூட்டம் முடிந்தபின், சென்னையில் தங்கியிருந்த பிரவீன் சக்கரவர்த்தியை, அனில் ஜெய்ஹிந்த், ஜிதேந்திர பாகேல், நவீன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
இத்தகவலை தன் எக்ஸ் பக்கத்தில் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணி வேண்டாம். தவெக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் தான் டெல்லியில் பேச வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அவரும், நானும் டெல்லி கூட்டணி குறித்து சில தகவல்களை கூறி இருக்கிறேன். அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன் என நிர்வாகிகளிடம் பிரவீன் சக்ரவர்த்தி கூறியதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் திமுகவிற்கு எதிராக மூவ் செய்து வருவது காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

