'ஜனநாயகன்' 3-வது சிங்கள் 'செல்ல மகளே...'  நாளை வெளியாகிறது:  விஜய் ரசிகர்கள் உற்சாகம் 

நடிகர் விஜயின் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் 3-வது சிங்கள் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  

'ஜனநாயகன்' 3-வது சிங்கள் 'செல்ல மகளே...'  நாளை வெளியாகிறது:  விஜய் ரசிகர்கள் உற்சாகம் 
'Jananayakan' 3rd single 'Sella Magale...' to be released tomorrow

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. தவெக எனும் அரசியல் கட்சி விஜய் தொடங்கிவிட்டதால், இதுவே கடைசி திரைப்படம். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் 3-வது பாடல் குறித்து அறிவிப்பு படக்குழு  வெளியிட்டு  உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow