சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திற்கு திடீர் சிக்கல் : ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆவது டவுட்?

‘பராசக்தி’ படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதனால் சிவகாரத்திகேயன் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி படம் வெளியாவது கடினம் திரையுலகில் கூறி வருகின்றனர். 

சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திற்கு திடீர் சிக்கல் : ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆவது டவுட்?
Sivakarthikeyan's 'Parasakthi' faces sudden problem

1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி கூறியிருக்கிறார்கள். இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் பராசக்தி படத்தின் தணிக்கைப் பணிகளை சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார்கள். இப்படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி படக்குழுவினரை அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்னை எழுந்துள்ளது. சிவகார்த்திகேயனின் படத்திற்கு ஏற்பட்டு இருக்கும் இந்த சிக்கல் அவரது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow