‘ஜனநாயகன்’ படம் நாளை ரிலீஸ்?யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சாருக்கு நீதிமன்றம் உத்தரவு: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி 

ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ்வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். படம் ரிலீஸ் ஆக தடை நீக்கியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

‘ஜனநாயகன்’  படம் நாளை ரிலீஸ்?யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சாருக்கு நீதிமன்றம் உத்தரவு: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி 
Janyayan movie to release tomorrow?

கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதைத்தொடா்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்வரை மறுஆய்வு செய்ய தணிக்கை வாரியத்துக்கு முழு அதிகாரம் இருப்பதாக வாதிடப்பட்டது. 

‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், வெள்ளிக்கிழமை (ஜன.9) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பளித்தார். 

தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது: சென்சார் போர்டு இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும். ஜனநாயகன் - மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து.விஜயின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும். 

ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் தணிக்கை சான்று வழங்கியாக வேண்டும். ஜனநாயகனை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow