Kalki Box Office: கல்கி 2898 AD முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா..? மரண மாஸ் காட்டிய பிரபாஸ்!

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD இன்று வெளியான நிலையில், இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 27, 2024 - 17:19
Kalki Box Office: கல்கி 2898 AD முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா..? மரண மாஸ் காட்டிய பிரபாஸ்!

சென்னை: நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், கமல்ஹாசன் வில்லனாகவும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் லீடிங் கேரக்டரிலும் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இப்படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். அதேபோல், பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது கல்கி 2898 AD. இப்படத்திற்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்ததால், டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங்கில் அடித்து நொறுக்கியது. 

அதன்படி, கல்கி படத்திற்கு முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 55 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் நாளில் கண்டிப்பாக 100 கோடி வரை கலெக்ஷன் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கல்கி 2898 AD வசூலில் சக்கைப் போடு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் கல்கி 2898 AD படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. முக்கியமாக ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் ஒரு டிக்கெட் விலை 1300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. அப்படியிருந்தும் ரசிகர்கள் கல்கி படம் பார்க்க அதிக ஆர்வம் காட்டினர். 

இந்நிலையில், கல்கி 2898 AD திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் 200 கோடி வசூல் கன்ஃபார்ம் என்றே பாக்ஸ் ஆபிஸ் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், இந்த வாரம் ஞாயிறு வரையிலான முதல் நான்கு நாட்களில், கல்கி வசூல் ஆயிரம் கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு ஷாருக்கானின் பதான், ஜவான் படங்கள் தலா ஆயிரம் கோடி வசூலித்தன. அதேபோல், பிரபாஸின் சலார், விஜய்யின் லியோ இரண்டு படங்களும் ஆயிரம் கோடி கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், லியோ 500 கோடியும், பிரபாஸின் சலார் 700 கோடி வரை மட்டும் வசூலித்திருந்தது. பிரபாஸ் சலார் படத்தில் விட்டதை கல்கியில் பிடித்துவிடுவார் என்றே சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் இப்படத்திற்கு எதிர்பார்த்தளவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. ரசிகர்கள் பலரும் கல்கி 2898 AD பொம்மை படம் போல இருப்பதாகவும், பிரபாஸ் எப்படி இந்த கதையை செலக்ட் செய்தார் என்றும் விமர்சித்து வருகின்றனர். படத்தின் இறுதியில் கமல் வரும் 10 நிமிடங்கள் மட்டுமே படம் கூஸ்பம்ஸ் மொமண்ட்டாக உள்ளது, மற்றபடி இது கார்ட்டூன் மூவி தான் என கலாய்த்து வருகின்றனர். 

ஒருவேளை தொடர்ந்து கல்கி 2898 AD படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்தால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பெரிய அடி விழும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் ரசிகர்களோ கல்கி கன்ஃபார்மாக 2000 கோடி வசூலிக்கும் என நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். அதேநேரம் கல்கி தயாரிப்பு நிறுவனம் சார்பாக படத்தின் உணமையான வசூல் பற்றி எப்போது அப்டேட் வரும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow