Kalki Trailer: பிரபாஸ் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி... கல்கி ட்ரெய்லர் அப்டேட் இதோ!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடித்துள்ள கல்கி படத்தின் ட்டெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Jun 5, 2024 - 10:59
Kalki Trailer: பிரபாஸ் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி... கல்கி ட்ரெய்லர் அப்டேட் இதோ!

சென்னை: டோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக கமல்ஹாசனும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பசுபதி, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஃபேன்டஸியாக உருவாகியுள்ள கல்கி பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகிறது. இதனால் டோலிவுட் மட்டுமின்றி தமிழ், இந்தி மொழி ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கல்கி ட்ரெய்லர் ரிலீஸ்
 
கல்கி திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் இந்த மாதம் 27ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக போஸ்ட் புரொடக்ஷன் உட்பட கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என்றும், அதனால் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல், அதன் முடிவுகளுக்காக மட்டுமே கல்கி படத்தின் ரிலீஸ் தேதியில் குழப்பம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜூன் 27ம் தேதி கல்கி ரிலீஸாகும் என்பதை படக்குழு கடந்த வாரம் கன்ஃபார்ம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கல்கி ட்ரெய்லர் ரிலீஸ் குறித்தும் அபிஸியலாக அப்டேட் கொடுத்துள்ளது.

கல்கி ப்ரோமோஷன்

அதன்படி, கல்கி 2898 ஏடி படத்தின் ட்ரெய்லர் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. பிரபாஸின் புதிய போஸ்டருடன் வெளியான இந்த அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கல்கி ட்ரெய்லரை தொடர்ந்து இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாம். இதில், சென்னை, ஐதராபாத், கொச்சி, மும்பை, டெல்லி என பல இடங்களில் கல்கி ப்ரோமோஷன் நடக்கவிருப்பதாகவும், அதில், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் கலந்துகொள்ளலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

எதிர்பார்ப்பில் கல்கி

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான சலார் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் பாகுபலி அளவிற்கு பெரியளவில் வசூலிக்கவில்லை. அதேநேரம் சலார் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார் பிரபாஸ். இதனால் கல்கி படத்துக்கு பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கல்கி முதல் பாகத்தில் கமல்ஹாசனின் போர்ஷன் குறைவாகவே இருக்கும் என்றும், இரண்டாம் பாகத்தில் தான் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow