Sivakarthikeyan: “மூன்றாவது குழந்தைக்கு அன்பும் ஆசியும்..” நெகிழ்ச்சியான சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதியினருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Jun 3, 2024 - 18:46
Sivakarthikeyan: “மூன்றாவது குழந்தைக்கு அன்பும் ஆசியும்..” நெகிழ்ச்சியான சிவகார்த்திகேயன்!

சென்னை: கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது டிவிட்டரில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்ட சிவா, தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23ல் பிஸியாகிவிட்டார். இதனிடையே சமீபத்தில் சிவகார்த்திகேயன், தனது மனைவியுடன் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி வைரலானது. அதில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கர்ப்பமான நிலையில் அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதனால் சீக்கிரமே சிவா வீட்டில் இன்னொரு மகிழ்ச்சியான சம்பவம் நிகழும் என சொல்லப்பட்டது.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள் ஆராதனா சினிமாவில் பாடல் பாடி அசத்த, மகன் குகன் இன்னும் மீடியா வெளிச்சத்துக்கு வரவில்லை. இவர்களையடுத்து மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம், ஆராதனாவிற்கும் குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனவிக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதி இடையே பிரச்சினை என்றும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதாவது இசையமைப்பாளர் டி இமான், அவரது மனைவியை பிரிய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து தான் சிவகார்த்திகேயனும் அவரது மனைவியும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்பட்டன. ஆனால், அதெல்லாம் வதந்தி என்பதை அனைவருக்கும் புரிய வைக்கும் விதமாக மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளனர் சிவா – ஆர்த்தி தம்பதியினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow