Kamal Hassan: தேர்தல் பணிகள் அவசரம்… தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விட்ட கமல்

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் திடீரென தக் லைஃப் படப்பிடிப்புக்கு கமல் பிரேக் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mar 7, 2024 - 13:00
Kamal Hassan: தேர்தல் பணிகள் அவசரம்… தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விட்ட கமல்

மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ள கமல்ஹாசன், சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதனையடுத்து செர்பியா சென்ற படக்குழு, ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டு கமலுக்காக காத்திருந்தது. ஆனால் தற்போது கமல்ஹாசன் செர்பியா செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக தேர்தல் பணிகளிலும் கூட்டணியை இறுதி செய்வதிலும் தீவிரம் காட்டி வரும் அவர், தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுள்ளதாக தெரிகிறது. செர்பியா பயணத்தை கேன்சல் செய்துவிட்டு தேர்தலுக்காக பம்பரமாக சுழன்று வரும் கமல்ஹாசனால், மணிரத்னம் உள்ளிட்ட தக் லைஃப் படக்குழுவினர் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனிடையே திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கமல்ஹாசன் விரைவில் அறிவாலயம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow