காஞ்சிபுரம்: சாலை மறியல் செய்த 300க்கும் மேற்பட்ட விசிகவினர் கைது
300-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் அமர்ந்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்திலேயே பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும், வேறு இடத்திற்கு மாற்ற கூடாது என்பதனை வலியுறுத்தி காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்ட துவங்கினர்.அதே கிராமத்தைச்சேர்ந்த மாற்று சமுதாய நபர் ஒருவர் நீர்நிலை பகுதியில் கட்டபட்டு வருகிறது என வழக்கு தொடர்ந்தார்.இது தொடர்பான வழக்கில் நீர்நிலைப் பகுதிகளில் கட்டிடத்தை கட்டக்கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவிந்தவாடி அகரம் கிராமத்திலேயே பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும், வேறு இடத்திற்கு மாற்ற கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 300க்கும் சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதியில் குவிந்தனர்.இதனையெடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் போலீசாரின் தடுப்புகளையும் மீறி பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் அமர்ந்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போல்சார் தடுக்க முயன்ற போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சற்று பரபரப்பு நிலவியது.அதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
What's Your Reaction?