விருத்தாச்சலம்: காலாவதியான மீன்கள் பறிமுதல்
விருத்தாச்சலம் மீன் மார்ட் பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத்துறையினர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
விருத்தாச்சலம் அருகே மங்களம்பேட்டையில் காலாவதியான மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் சாலையில் மீன்களை கொட்டி அழித்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே மங்கலம்பேட்டை கடைவீதிகளில் மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். மீன் கடைகளில் அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென மீன் கடைகளில் சென்று மீன்களை பார்த்து காலாவதியான மீன்களா? என ஆய்வு செய்தனர்.
அப்பொழுது சுமார் 15 கிலோக்கும் மேற்பட்ட இறால் மீன்கள் அழகிய நிலையில் கெட்டுப்போனது.தெரியவந்தது.கடைக்கு மீன் வாங்க வந்தவர்கள் அழுகிப்போன மீன்கள் என அதிகாரிகள் உறுதி செய்ததை கண்டதும் வாடிக்கையாளர்கள் மீன்களை வாங்காமல் திரும்பி சென்றனர்.
இதே போல் மற்ற கடைகளிலும் மீன்கள் அழுகிய நிலையில் தான் உள்ளதா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கடை மற்றும் இறைச்சி கடைகளில் அனைத்து கடைகளிலும் சென்று உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பல்வேறு மீன்களும் காலாவதியானது தெரியவந்ததையெடுத்து அனைத்தும் பறிமுதல் செய்து பொதுமக்கள் மத்தியில் சாலையில் கொட்டி உணவு பாதுகாப்பு துறையினர் அழித்தனர். பிறகு காலாவதியான மீன் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மீண்டும் காலாவதியான மீன்களை இப்பகுதியில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் உணவு பாதுகாப்புத்துறையினரும் கடைகாரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து விருத்தாச்சலம் மீன் மார்ட் பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத்துறையினர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் மீன்கள் வைத்திருக்கும் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக சுகாதாரமாக உள்ளதா? என பாக்ஸுகளை ஐஸ் பெட்டிகளை ஆய்வு செய்து கடைக்காரர்களுக்கு சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான அறிவுரைகளையும் வழங்கினர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?