Kanguva: “அச்சச்சோ..பயங்கரமான ஆளா இருப்பாரோ..” கங்குவா டீசர் எப்படி இருக்கு… Fans Reactions!

சூர்யாவின் கங்குவா டீசர் நேற்று மாலை வெளியானது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ரியாக்‌ஷன்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

Kanguva: “அச்சச்சோ..பயங்கரமான ஆளா இருப்பாரோ..” கங்குவா டீசர் எப்படி இருக்கு… Fans Reactions!

சூர்யாவின் 42வது படமான கங்குவா ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகியுள்ளது. பான் இந்தியா படமான கங்குவாவை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ள கங்குவா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், கங்குவா படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது.

கங்குவா டீசர் வெளியானது முதல் இப்போது வரை 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதேநேரம் இந்த டீசர் எதிர்பார்த்தளவில் இல்லையென நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் கொடுத்துள்ளனர். “கிராபிக்ஸ் ஒர்க் இன்னும் கொஞ்சம் ஒர்த்தா இருந்தா நல்லா இருக்கும்… தயவுசெய்து டைம் எடுத்து இன்னும் தரமா கொடுங்க” என ரசிகர் ஒருவர் கமெண்ட்ஸ் செய்துள்ளார். அதேபோல், சூர்யா, பாபி தியோல் இருவருமே ஓவர் ஆக்டிங் பெர்ஃபாமன்ஸ் செய்துள்ளதாகவும், அச்சச்சோ சூர்யா பயங்கரமான ஆளா இருப்பாரோ என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். 

மேலும், கங்குவா குடும்பத்துடன் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. எப்பவும் இதே மாதிரி ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறையை அதிகம் வைத்து தான் படம் எடுப்பீங்களா..? எல்லா படங்களும் இப்படியே இருந்தா எப்படி தான் பாக்குறது என கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னொரு பக்கம் கங்குவா டீசரை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யா கேரியரில் கங்குவா கண்டிப்பாக தரமான சம்பவமாக இருக்கும் எனவும், கண்டிப்பாக இந்தப் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்றும் பாசிட்டிவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow