திமுகவை புகழ்ந்து காங்கிரஸை வாரிய பாட்டி.. சிரித்து சமாளித்த கார்த்தி சிதம்பரம்!
வாஞ்சையாக வரவேற்ற பெண்கள், திடீரென தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என வார்த்தைகளால் கழுத்தை நெறித்துள்ளனர்.
சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரிக்க சென்ற போது கேள்விக்கணைகளால் பெண்கள் துளைத்தெடுத்தனர். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சிரித்தபடியே சிலையாக நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தனது தொகுதிக்குட்பட்ட சாக்கோட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பெண்கள் கூட்டத்தில் இருந்த வயது முதிர்ந்த பெண் ஒருவர் சத்தமாக கோஷமெழுப்பி கொண்டிருந்தார்.
இதனை கண்டு மனம்நெகிழ்ந்த கார்த்தி, ஓடிச்சென்று எம்.ஜி.ஆர் பாணியில் பெண்ணின் தோளில் கைபோட்டு போஸ் கொடுத்தார். உடனே குரலை உயர்த்திய அந்த பெண்மணி, சிறுவயதில் இருந்தே கருணாநிதியின் திமுக கட்சிக்கு தான் வாக்களித்து வருவதாகவும், அவரோடு இணைந்த உங்களுக்கு தான் என்னோட ஓட்டுனு ஆணித்தரமாக கூறினார்.
அத்துடன், ஒரு லட்சம் கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதி அளிப்பார்கள் அதனை எல்லாம் நம்பாதீங்க என அப்பெண் காங்கிரஸை சைலண்டாக திட்ட, கார்த்திக்கு தூக்கி வாரிபோட்டது. இருந்தும் சிரித்து சமாளிப்போம் என சிரித்தபடியே மழுப்பி நடையை கட்டினார்.
அங்கதான் அப்படினு பார்த்தால், மித்ராவயல் சென்ற அவரை வாஞ்சையாக வரவேற்ற பெண்கள், திடீரென தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என வார்த்தைகளால் கழுத்தை நெறித்துள்ளனர்.
இதனால் கடுப்பான கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள், கேள்வி எழுப்பிய பெண்களுக்கு மிரட்டலை பதிலாக அளித்துள்ளனர். முன்னதாக வாக்கு சேகரிக்க சென்ற அப்பாவதான் இப்படி செஞ்சாங்கனு பார்த்தால், நமக்கு அதவிட ஸ்பெஷலா பண்றாங்களேனு தர்மசங்கடமான கார்த்திக் சிதம்பரம் என்னசெய்வதென்று தெரியாமல் புன்னகையுடன் கும்பிடு போட்டுச்சென்றார்.
What's Your Reaction?