சென்னை சென்ட்ரல் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்.. நள்ளிரவில் பரபரப்பு..
ரயில் தடம் புரண்டதற்கான விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
சென்னை அருகே நள்ளிரவில் தடம் புரண்ட சரக்கு ரயிலால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
சென்னை சென்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் சரக்கு ரயிலின் எஞ்சின் தடம் புரண்டது. இதனால், சில பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. நள்ளிரவு 12 மணியளவில் தகவலறிந்து வந்த ரயில்வே பணியாளர்கள் சீரமைப்பில் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அவர்கள் சேத விவரங்களை சேகரித்தனர். இந்த விபத்தால் யாருக்கும் காயமும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரயில்வே பணியாளர்கள் பின்னர் விளக்கம் அளித்தனர்.
சுமார் 3 மணிநேரம் சீரமைப்பு பணிகள் நடந்தன. இந்த நிலையில், ரயில் தடம் புரண்டதற்கான விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
What's Your Reaction?