பல்லுயிர் பூங்காவாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும்.. சென்னையில் நடந்த முக்கிய மீட்டிங்.. செளமியா அன்புமணி கூறியது என்ன?
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தை பல்லுயிர் பூங்காவாக மாற்ற வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும் என்ற தலைப்பில், அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, முன்னாள் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய சௌமியா அன்புமணி, "சென்னையை சுற்றி நிறைய நீர்தேக்கங்கள் உள்ளன. மழை நீர் வடிகால்கள் கட்டமைப்புகள் உள்ளன. ஆனாலும் வெள்ளத்தால் நாம் தத்தளித்தோம். இங்கு ஏரிகள் மீது வீடுகள் கட்டப்படுகின்றன. கேட்டால் ஏரி திட்டம் என்கிறார்கள். அதில் அரசு அதிகாரிகளே குடியேறுவதுதான் விநோதமாக உள்ளது. சென்னைக்கு தேவையான தண்ணீர் மழையின் வாயிலாக நமக்கு கிடைத்தாலும், முறையான சேமிப்பு இல்லாததால் அவை வீணாக கடலில் கடந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
சென்னையில் பல்லுயிர் பூங்கா இல்லை. பெரு நகரங்களில் பூங்கா கட்டாயம் உள்ளது. கோயம்பேட்டில் இருந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது கோயம்பேட்டில் மால் வர போகிறது என்கிறார்கள் அதனால் என்ன பயன் என்பது தெரியவில்லை.அங்கு பூங்கா அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இயற்கையை பாதுகாக்க நிறைய போராடி வருகிறோம். அரசுதான் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்" என்றார்.
What's Your Reaction?