சூரியனார் கோவில் ஆதினமடம் குறித்து நாளை முடிவு-அமைச்சர் பி.கே.சேகர்பாபு 

மடத்தை எடுத்துக் கொள்வதற்கான கடிதத்தை  அதிகாரிகள் பெற்றுள்ளனர்.இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. நாளைக்குள் முடிவெடுக்கப்படும்.

Nov 13, 2024 - 12:22
சூரியனார் கோவில் ஆதினமடம் குறித்து நாளை முடிவு-அமைச்சர் பி.கே.சேகர்பாபு 

சூரியனார் கோவில் ஆதினமடத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து நாளைக்குள் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,  "வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 218 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.  பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொண்ட தி்ட்டபணிகளை காலை முதல் ஆய்வு செய்து வருகிறோம். 

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் அருகே சூரியனார் கோவில் ஆதின மடம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருமா என எழுப்பட்ட கேள்விக்கு, இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 60 மற்றும் 60A யின்படி இதுபோன்று  குற்றச்சாட்டுகள் ஏற்படுகிற போது முழுமையான விசாரணை நடத்தி மடத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வது.மற்றொரு சட்டப்பிரிவில் அவர்களை விரும்பி இந்து சமய அறநிலை துறைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கேட்டுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.

மடத்தை எடுத்துக் கொள்வதற்கான கடிதத்தை  அதிகாரிகள் பெற்றுள்ளனர்.இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. நாளைக்குள் முடிவெடுக்கப்படும்.மடத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது எங்களுக்கு தெரியாது அது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயங்காது” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow