குரோதி வருட தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்கள்: மேஷ ராசிக்காரர்களுக்கு மனம்போல மாங்கல்யம்

குரோதி தமிழ் புதுவருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. புத்தாண்டு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 10, 2024 - 17:09
குரோதி வருட தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்கள்: மேஷ ராசிக்காரர்களுக்கு மனம்போல மாங்கல்யம்

அலுவலகத்துல இதுவரை இருந்த சூழல் மாறும்க.  உங்க திறமைக்கு உரிய ஏற்றமும் மாற்றமும் மளமளன்னு  ஏற்படும்க. மேலதிகாரிகளின் ஆதரவுக் கரம் நீளும்க. விரோத அமைப்புல இருந்தவங்க கூட தவறு உணர்ந்து உங்ககிட்டே நட்புடன் பழகத்தொடங்கும் நிலைமை ஏற்படும்க. இந்த சமயத்துல அவசரமும் அலட்சியமும் எந்தப் பணியிலும் வேண்டாம்க. புதிய பொறுப்புகள் வந்தா, திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்படுங்க.

குடும்பத்துல குதூகலம் நிறையத்தொடங்கும்க. வரவு அதிகரிக்கும்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. அவங்க வாழ்க்கைல இருந்த சுபகாரியத் தடைகள் விலகும்க. ஆடை, ஆபரணம் சேரும்க. வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க நேரம் அமையும்க. மனம்போல மாங்கல்யமும் மழலை பாக்யமும் கிட்டும்க. குலதெய்வ வழிபாட்டை இந்தக் காலகட்டத்துல நிறைவேற்றிடறது நல்லதுங்க.

செய்யும் தொழில்ல சீரான போக்கு ஏற்படும்க. சோம்பல் தவிர்த்து செயல்பட்டா சீக்கிரமே லாபம் அதிகரிக்கப் பெறலாம்க. வங்கிக் கடன்களை முறையாகத் திருப்பி செலுத்திடறதும், உரியகுறிப்புகளை பத்திரமா வைச்சுக்கறதும் அவசியம்க. அயல்நாட்டு வர்த்தகத்துல ஆதாயம் அதிகரிக்கும்க. புதிய முதலீடுகளைச் செய்யும் முன் உரிய ஆலோசனை செய்வது அவசியம்க.

அரசு, அரசியல் துறைசார்ந்தவங்களுக்கு உங்க திட்டமிடலும் செயலாற்றும் திறனும் மேலிடத்தால் உணரப்படும்க. உடனிருந்தே உங்களுடைய வளர்ச்சியைத் தடுத்த சிலரோட முகமூடிகள் கழன்று இப்போது நிஜம் தெரியவரும்க. யாருக்காகவும் அவசியமில்லாத வாக்குறுதிகளைத் தரவோ, ஜாமீன் கையெழுத்திடவோ செய்யாதீங்க.

 மாணவர்களுக்கு சோம்பலை விரட்டறதுல சோம்பல் கூடாதுங்க. அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிச்சா, என்றென்றும் பெருமை பேசப்படும்க. உயர்கல்வி வாய்ப்புகள் உங்க மனம்போல கிட்டும்க. தாமதம் ஆனாலும் முயற்சிகளைத் தளரவிடவேண்டாம்க.

கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு உரிய வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்க. படைப்பு சார்ந்த ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துக்க வேண்டாம்க. மறைமுக நபர்களோட சகவாசம் நெருங்காம பார்த்துக்கிட்டாலே உங்க வாழ்க்கைல நிறைகுடமா ஜெயிக்கும்க.

தொலைதூரம் வாகனத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம்க. உடன் வரும் யாரிடமும் உங்க குடும்பத்து ரகசியங்களை பகிர்ந்துக்கறதும் கூடாதுங்க.

அடிவயிறு, முதுகு, கழிவு உறுப்பு, அஜீரணம், தலைவலி உபாதகள் வரலாம்க. தினமும் சிறிது நேரமாவது இயன்ற உடற்பயிற்சிகளை அவசியம் செய்யுங்க. இந்த ஆண்டுமுழுக்க திருச்செந்தூர் முருகப்பெருமானை நினைச்சு தினம் தினம் கும்பிடுங்க. வாழ்க்கைல நிம்மதி நிறைஞ்சிருக்கும்.

- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow